நடிகர் மாதவன் யோசிக்காமல் ஒதுக்கிய 5 படங்கள்! சூர்யாவின் வாழ்க்கையில் விளக்கேற்றிய கஜினி, காக்க காக்க!!

0
91
#image_title

நடிகர் மாதவன் யோசிக்காமல் ஒதுக்கிய 5 படங்கள்! சூர்யாவின் வாழ்க்கையில் விளக்கேற்றிய கஜினி, காக்க காக்க!!

பிரபல நடிகர் மாதவன் அவர்கள் ஒதுக்கிய டாப் 5 வெற்றிப் படங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் விஜய், அஜித் அவர்களுக்கு அடித்த இடத்தில் விக்ரம், மாதவன் ஆகியோர்களின் பெயர்கள் இருந்தது. நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம் அனைவரும் இன்றுவரை பல படங்களில் நடித்து முன்னனி ஹீரோக்களாக இருக்கின்றனர். ஆனால் நடிகர் மாதவன் தற்போது அந்த பட்டியலில் இல்லை.

அதற்கு காரணம் இவர் முன்பு மிஸ் செய்த சில படங்கள் தான். நடிகர் மாதவன் மிஸ் செய்த இரண்டு படங்களில் மிக நேர்த்தியாக நடித்த நடிகர் சூரியா அவர்கள் மாதவன் அவர்களின் இடத்தை பெற்றுவிட்டார். அவ்வாறு தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் அவர்கள் தவற விட்ட ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

மாதவன் தவறவிட்ட 5 படங்கள்…

1. கஜினி

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா அவர்கள் நடிப்பில் உருவான கஜினி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்தது. இந்த ஹிட் படத்திற்கு சூர்யா அவர்களை நடிக்க வைப்பதற்கு முன்பாக இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்கள் முன்பு நடிகர் மாதவன் அவர்களை நடிக்க வைக்க அவரிடம் கதை கூறியுள்ளார். ஆனால் நடிகர். மாதவன் அவர்களுக்கு இரண்டாவது பாதி கதை பிடிக்காததால் கஜினி படத்தை ரிஜெக்ட் செய்தார். இதையடுத்து நடிகர் சூர்யா அவர்கள் ஓகே செல்லி நடித்து பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

2.காக்க காக்க

இயக்குநர் கௌவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படத்தால் நடிகர் சூர்யா அவர்களின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக இருந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு நடிகர் சூரியா அவர்களை நடிக்க வைப்பதற்கு முன்னாள் இயக்குநர் கௌதமி வாசுதேவ் மேனன் அவர்கள் நடிகர் மாதவன் அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் நடிகர் மாதவன் இது போன்ற ஆக்சன் திரைப்படம் எல்லாம் எனக்கு செட் ஆகாது என்று கூறி அந்த திரைப்படத்தையும் ரிஜெக்ட் செய்தது மிகப் பெரிய தவறான முடிவாக அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்தது.

3. 7ஜி ரெயின்போ காலனி

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா சோனியா அகர்வால் ஆகியோரது நடிப்பில் உருவான 7ஜி ரெயின்போ காலனி இன்று வரை 90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் திரைப்படமாக உள்ளது. இந்த. திரைப்படத்தில் நடிக்க வைக்க நடிகர் மாதவன் அவர்களிடம் இயக்குநர் செல்வராகவன் அவர்கள் கேட்டுள்ளார். ஆனால் நடிகர். மாதவன் அவர்கள் கால்ஷீட் பிரச்சனையால் இதை ரிஜெக்ட் செய்தார்.

4. ரமணா

நடிகர் மாதவன் அவர்கள் மிஸ் திரைப்படங்களில் ரமணா திரைப்படமும் ஒன்று. ரமணா திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கியிருந்தார். மேலும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் ரமணா திரைப்படத்தில் கனக்கட்சிதமாக நடித்திருப்பார். ஆனால் நடிகர் மாதவன் அவர்கள் பல காரணங்களை கூறி இந்த வாய்ப்பை மிஸ் செய்தார்.

5. நண்பன்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவான நண்பன். திரைப்படம் ஹிந்தியில் வெளியான 3 இடியட் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். 3 இடியட் திரைப்படத்தில் நடிகர் மாதவன். அவர்கள் நடித்திருப்பார். இதையடுத்து இயக்குநர் ஷங்கர் அவர்கள் நண்பன் திரைப்படத்தில் நடிக்க அணுகினார். ஆனால் 3 இடியட் திரைப்படத்தில் நடித்த அதே கதாப்பாத்திரத்தில் நடிக்க கேட்டதால் நடிகர் மாதவன் மறுத்துவிட்டார். மேலும் அப்பொழுது நடிகர் மாதவன் அவர்களுக்கு 41 வயது ஆனதால் கல்லூரி மாணவன் கதாப்பாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி ரிஜெக்ட் செய்தார். நடிகர் மாதவன் ரிஜெக்ட் செய்த அதே காதப்பாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் சூப்பராக நடித்திருப்பார்.