மூன்றாவது சதம் அடித்த ரச்சின் ரவீந்திரா! பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து!!

0
37
#image_title

மூன்றாவது சதம் அடித்த ரச்சின் ரவீந்திரா! பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து!!

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் தொடரில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காகக் நிர்ணயித்தது.

உலகக் கோப்பை தொடரின் 35வது லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடங்கியது வீரர்களாக களமிறங்கினர்.

தொடக்க வீரர் கான்வே 35 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். காயத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அணியில் இடம் பிடித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ரச்சின் ரவீந்திரா உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்தார். 5 ரன்களில் சதத்தை தவறவிட்டு 95 ரன்களுக்கு கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய ரச்சின் ரவீந்திரா சதம் அடித்தார். அதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது சதத்தை அடித்து ரச்சின் ரவீந்திரா சாதனை படைத்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய டேரி மிட்செல் 29 ரன்களுக்கும், மார்க் சாப்மென் 39 ரன்களுக்கும், கிளென் பிலிப்ஸ் 41 ரன்களுக்கும் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்கள் சேர்த்தது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் என்ற மெகா இலக்கை நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணியில் முகம்மது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளையும்