இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!!

0
37
#image_title

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!!

நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக இன்னொரு பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்திய அணி விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் இருக்கின்றது. மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடருக்கான அரையிறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணி இன்னும் இரண்டு லீக் சுற்றுகளில் விளையாடவுள்ளது. மேலும் அரையிறுதிப் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் காயம் காரணமாக மீதமுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்பொழுது அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான லீக் சுற்றில் விளையாடியது. அப்பொழுது பந்துவீசிய ஹர்திக் பாண்டியா அவர்களுக்கு எதிர்பாராத விதமாக கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ கண்காணிப்பில் ஹர்திக் பாண்டியா சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் லீக் சுற்றுகளில் இந்தியா விளையாடிய கடைசி போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இருப்பினும் அணியின் முக்கிய போட்டியாளராக இருக்கும் ஹர்திக் பாண்டியா அரையிறுதி போட்டியில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் தற்பொழுது ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அவர்கள் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. மேலும் இவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளார் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இதே போல நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி அவர்களுக்கு பதிலாக கைல் ஜேமிசன் அவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா விலகியது பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.