தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !!

0
221
5 pounds of jewelry stolen from an old lady near Tanjore?
5 pounds of jewelry stolen from an old lady near Tanjore?

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !!

தஞ்சை அருகே  அருளானந்த அம்மாள் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மனைவி ஆக்னஸ் மேரி.இவருடைய  வயது 85. இவர்களுடைய மகன் மகள் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனியாக தன் பூர்விக  வீட்டில் வசித்து வருகின்றார்.அவரது கணவன் தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வயது அதிகம் காரணமாக இறந்து விட்டார்.

எனவே ஆக்னஸ் மேரி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டின் உள்ள மாடி பகுதியை மட்டும்  வாடகைக்கு கொடுக்கலாம் என  முடிவு செய்தார்.அதன்படி  வீட்டின் வாசலில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்திருந்தார். சம்பவத்தன்று இந்த அறிவிப்பு பலகையை பார்த்த மர்ம நபர்கள் சிலர் அவரிடம் வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளனர்.

இதனை நம்பிய அந்த மூதாட்டி  மர்மநபர்களை மாடியரைக்கு  அந்த ரூம்களை கட்ட அழைத்து  சென்றுள்ளார். மாடி அறையினுள் சென்றவுடன் பின்னால் வந்த மர்மநபர்கள் திடிரென்று  ஆக்னஸ் மேரியை அங்கிருந்து நாற்காலியில் கட்டி போட்டு விட்டார்கள். கம்முனு இரு சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என  மிரட்டியுள்ளார்கள்.

உடனே ஒரு மர்ம நபர் அவர் அணிந்திருந்தசெயின் வளையல் மோதிரம் என ஐந்து பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து  அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளையர்கள் சென்ற பின்னர்  அந்த மூதாட்டி அலறல் சத்தம்  போட்டுக்கொண்டே இருந்தார்.அதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஆக்னஸ் மேரியை நாற்காலியில் இருந்து விடுவித்தனர்.

இது குறித்து ஆக்னஸ் மேரி தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் அழைத்துவரப்பட்டு  அறையில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து  மேற்கொண்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

Previous articleசேலம் மாவட்டத்தில் 89 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசாரின் அறிவுறுத்தல்!
Next articleபிரபல நடிகர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!