சேலம் மாவட்டத்தில் 89 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசாரின் அறிவுறுத்தல்!

0
96
Thug Act against 89 people in Salem district! Police instructions!
Thug Act against 89 people in Salem district! Police instructions!

சேலம் மாவட்டத்தில் 89 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசாரின் அறிவுறுத்தல்!

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை, கொலை , வழிப்பறி போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. அதனால் குற்ற செயலில் ஈடுபட்டவர் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் என பலர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஓராண்டு காலம் ஜெயிலில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் விபசார தொழிலில் ஈடுபடுவார்கள் போன்றவர்களும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும்  சேலத்தில்  நடைபாண்டில் கடந்த ஏழு மாதங்களில் மொத்தம் 89 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் வகையில் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுபவர்களின் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள் என்றும் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் சட்டத்தை மீறுபவர்களின் மீது தான் குண்டர் சட்டம் போடப்படுகிறது எனவும் தெரிவித்தனர். மேலும் இவர்களின் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் குறித்து இனிமேல் யாரும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் கூறினார்கள். இவர்களுக்கு மாவட்ட நீதிமன்றங்களில் ஜாமின் கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் சரியான காரணங்கள் இல்லாமல் யார் மீதும் வழக்கு போடப்பட மாட்டாது இதற்கான ஆவணங்களை தயார் செய்ய ஒரு வழக்கிற்கு  அரசு ரூ.7,000 வரை செலவு செய்கிறது எனவும் தெரிவித்தனர். இந்த செயல்முறையானது கொலை, கொள்ளை ,வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K