News

துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து சிறுமி பலி.. தந்தையை காண சென்ற இடத்தில் நடந்த துயரம்..!

துணிக்கடை இரும்பு கேட் விழுந்ததில் சிறுமி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த துணிக்கடையில் காவலாளியாக இருப்பவரின் ஐந்து வயது மகள் தனது தந்தையை காண தாயுடன் வந்துள்ளார். தந்தையை காண சென்ற அந்த சிறுமியின் மீது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்பு கேட் விழுந்துள்ளது.

இதில்,அந்த சிறுமி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை காண வந்த சிறுமிக்கு நேர்ந்த துயர சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

  கொதிக்கின்ற நீரில் கிராம்பை போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா? 

சிறுவர் சிறுமியர் இனி தியேட்டர்களுக்குள் அனுமதி இல்லை? வெளிவந்த அதிரடி உத்தரவு!!

Leave a Comment