7 மாத குறை பிரசவத்தில் பிறந்த ஆண் சிசு! கழிவறைக்குள் தூக்கி வீசி சென்ற அவலம்!

Photo of author

By Rupa

7 மாத குறை பிரசவத்தில் பிறந்த ஆண் சிசு! கழிவறைக்குள் தூக்கி வீசி சென்ற அவலம்!

இந்த காலகட்டத்தில் ஆசைக்காக பழகிவிடுகின்றனர். அவ்வாறு பழகி கருவுற்று,குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் சுயநலத்திற்காக தூக்கி எறிந்து விடுகின்றனர். சமீப காலமாக சென்னை இதர நகரங்களில் மானாவாரியாக இது நடக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிறந்த ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சாக்கடையின் அடியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.அவ்வழியே சென்ற ஒரு பெண் குழந்தையை மீட்டு ஒப்படைத்துள்ளார்.

இதுபோல தற்பொழுது பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. பரமக்குடி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் குறைந்தது 8 முதல் 9 பிரசவம் ஆவது நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெற்ற வருவது ஏழு மாத குறை பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தையை கழிவறை போல் தூக்கிப்போட்டு சென்று உள்ளனர். கழிவறையை சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளர் குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் முத்தரசன் என்பவருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிறகு போலீஸாருக்கும் தகவல் அளித்துள்ளனர். மருத்துவர்கள் அந்த ஆண் சிசுவை சோதித்ததில் இறந்து பல மணி நேரம் ஆனது தெரிய வந்தது.அதுமட்டும் இன்றி அந்த அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்களிடம் கேட்டபோது இது எங்கள் குழந்தை இல்லை என்று அனைவரும் கூறியுள்ளனர். மேலும் பலரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தை யாருடையது என்று தற்போது வரை தெரியவில்லை.