9 வகுப்பு மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆண்டுக்கு ரூ.1000 வெளிவந்த முக்கிய தகவல்!
கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் படிப்பு செலவிற்காகவும் அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஊரக திறனாய்வு தேர்வு வருடம் தோறும் நடைபெறும். இந்தத் தேர்வை ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே எழுத முடியும்.இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரம் வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசாங்க பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வு எழுத தகுதியானவர்கள். இந்த தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே இந்த தேர்வை எழுத முடியும்.
இந்த தேர்வானது இம்மாதம் பத்தாம் தேதி நடைபெறும் என்று கூறிய நிலையில் அரசு தேர்வுகள் இயக்கம் தற்காலிகமாக இத்தேர்வை ஒத்தி வைத்துள்ளது. தற்பொழுது வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறி உள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யக்கூடும்.
மேலும் பல மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்து எச்சரித்துள்ள நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பும் அளித்துள்ளனர். எனவே கனமழை சற்று ஓய்ந்த பிறகு மீண்டும் இந்த ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படும் என அரசு தேர்வு இயக்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல இந்த தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களுடைய ஹால் டிக்கெட்டை அவரவர் பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளும் படியும் அதில் ஏதும் திருத்தம் இருந்தால் தலைமை ஆசிரியரிடம் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.