தேனி டு கேரளா! தினமும் நூறு லாரிகள்! கடத்தப்படும் பொருள் என்ன தெரியுமா? கண்டுகொள்ளாத அரசாங்கம்!
கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்தப்படுகிறது.தேனி மாவட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது தேனி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு 3 வழித்தடங்களில்
தினந்தோறும் நூற்றுக்கணக்கான கேரள மாநில பதிவு எண்ணைக் கொண்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.குறிப்பாக போடி மூணார் சாலையிலும் கூடலூர் குமுளி சாலையிலும், கம்பம் , மேட்டு சாலைகளிலும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் உடைகற்கள்,கிரஷர் கற்கள், மணல் என 24 மணி நேரமும் எடுத்துச் செல்லப்படுகிறது.இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிம
வளங்கள் கேரள மாநிலத்தில் தேக்கடி-மூணார் 845 சாலை விரிவாக்கப் பணிகளுக்கு
பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இரண்டு வழித்தட சாலைகளை நான்கு வழித்தட சாலைகளாக மாற்றுவதற்காக
தேனி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம
வளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. நான்கு வழி சாலை பணிகள் தற்போது 50 சதவிகிதம் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.இந்த சாலை விரிவாக்கத்துக்கு
பயன்படுத்தப்படும் கற்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மலைகளைகளையும், பாறைகளையும் வெடி வைத்து தகர்த்தும் உடைத்து எடுத்து செல்லப்படுகிறது.மேலும் தினந்தோறும் மூணாறில் இருந்து போடி, குமுளி இருந்து தேனி வருவதற்குள் கேரளா பதிவு எண்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் மலைகளை உடைத்தெடுத்த கற்களை சுமந்தபடி குறைந்தபட்சம் 100 டாரஸ்
லாரிகளாவது கேரளா நோக்கி செல்வதை பொதுமக்கள் தினந்தோறும் காண முடிகிறது.
இதே போல் கேரளத்தின் விழிஞ்சம் துறைமுகத்திற்காக குமரி மாவட்டத்தின் பாதி மலைகளை பறி கொடுத்து விட்டோம்.இப்போது மூணாறு சாலை பணிகளுக்காக போடி, ஆண்டிபட்டி பகுதிகளிலுள்ள மலைகளையும் பாறைகளையும் பறி கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள்,அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், தமிழகத்தில் இருக்கிறார்களா அல்லது கேரள மாநிலத்தில் இருக்கிறார்களா என்று கேள்வி எழுந்து வருகிறது.தமிழகத்தின் இயற்கை வளத்தை அழித்து கேரளாவிற்கு அனுப்பி விட்டு சுற்றுசூழல் தினத்தை கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில் தினம் தோறும் கேரள மாநிலத்திற்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்களைக் கொள்ளை அடிக்கப்படுவது தமிழகத்தின் இயற்கை வளத்தை அழித்து கேரளாவிற்கு அனுப்பி விட்டு சுற்றுசூழல் தினத்தை கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில் தினம் தோறும் கேரள மாநிலத்திற்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்களைக் கொள்ளை அடிக்கப்படுவது கேலிக்கூத்தாய் உள்ளது.