புதிய கட்டுப்பாடுகள் அமல்! மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலையா?
கொரோன வைரஸ் தொற்று மீண்டும் படையெடுத்து அதிகமாக பரவி கடும் பாதிப்புகளை பரப்பி வருகிறது.இதனின் தாக்கத்தை குறைக்க கடும் கட்டுபாடுகள் அமல்படுத்த படுமோ என்று மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.மேலும் .மருத்துவ நிபுணர்கள் இந்த கட்டுபாடுகளை தவிர்கக் அறிவுரைகளை கூறியுள்ளனர்.
கட்டுபாடுகள் :
கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. 24 மணி நேரத்தில் 2283 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று கடந்த ஒரு மாத காலமாக அதிகரித்து வருகிறது.மருத்துவர்கள் இந்த கொரோன தொற்று நான்காம் அழை என கூரியுள்ளனர். இதனால் சுகதாரதுறை மக்களை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.தற்போது தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறித்தி வருகின்றனர்.
பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகின்றது. அதனால் கொரோனா பாதிப்பின்றி சற்று வீரியம் குறைவாக உள்ளது.ஏனென்றால் தமிழகத்தில் குறைந்தபட்ச அளவே கொரானா தடுப்பூசியை மக்கள் செலுத்தியுள்ளனர். அதனால் தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிரபடுதியுள்ளது.சூப்பர் மார்க்கெட், பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 500ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.இதையெடுத்து கூடுதல் கட்டுபாடுகள் கூற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகிறது.
மேலும் இந்த கட்டுபாடுகளை பொதுமக்கள் கடைபிடித்தலே போதுமானது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால் முழு ஊரடங்கு போன்ற கடும் கட்டுபாடுகளை தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதை அரசு உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.இன்னும் சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு ஆர்வம் காட்டபடாததால் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு வேண்டும் என கூறியுள்ளனர்.மேலும் சுகாதத்துரை அமைச்சர் இரண்டு வாரங்களுக்கு பின் ஒரு முறை சிறந்த தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.