பாரதம பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி!

0
175
Funds for farmers under the Bharatama Pratham Mantri Kaur Nidhi scheme!
Funds for farmers under the Bharatama Pratham Mantri Kaur Nidhi scheme!
பாரதம பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி!
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு , மயிலாடும்பாறை, குமணந்தொழு ,முத்தாலப்பாறை,  வருசநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, முறுக்கோடை,  சிங்கராஜபுரம் காந்திராமம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்து வரும் சிறு குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பாரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 2000 வீதம் மூன்று தவனையாக  ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா நகல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம்,போட்டோ ரேஷன் கார்டு ,செல் நம்பர் உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து கடமலைக்குண்டு வேளாண்மை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த நிதியினை விரைவாக பெறுவதற்கு கண்டமனூர் வள்ளல் நதி வருவாய் கிராமத்திற்கு உதவி வேளாண் அலுவலர் முனியாண்டி, கடமலைக்குண்டு வருவாய் கிராமங்களுக்கு உதவி அலுவலர் செந்தில்குமார் ,மயிலாடும்பாறை வருவாய் கிராமங்களுக்கு வேளாண் உதவி அலுவலர்கள் சுருளிராஜ், ரெங்கராஜ், மேகமலை வருவாய் கிராமங்களுக்கு உதவி அலுவலர் முனீஸ்வரன் ஆகியோரை தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன் அடையுமாறு கடமலைக்குண்டு வேளாண் த்துறை இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
Previous articleஇந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!.. 
Next articleஆடிப்பெருக்கை முன்னிட்டு  பிடிக்காசு பணம்வழங்கிய அருள் வாக்கு சித்தர்! மகிழ்ச்சியில் மக்கள்!