இந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!.. 

0
169
I will never forget India.
I will never forget India.

இந்தியாவை என்றும் மறக்க மாட்டேன் !.இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்ததாக மனம் உருகி  நன்றி தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே!!..

கொழும்பியாவில் இலங்கை நாடாளு மன்றம் ஏழு நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் குழு கூடியது. இந்நிலையில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு நாடாளுமன்ற நுழைவு வாயிலில் முப்படைகளின் அணிவகுப்பு கொண்ட மரியாதையுடன் சிவப்பு பட்டு துண்டு போர்த்தப்பட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரை வரவேற்க சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனா நாடாளுமன்ற செயலாளர் தம்மிகா தசநாயகா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசின் கொள்கை அறிக்கையை வெளியிட்டு ரணில் விக்ரமசிங்கே தொடர்ந்து  பேசினார். அங்கு அவர் கூறியிருப்பதாவது,இலங்கையில் ஏற்ப்பட்ட கலவரத்தால் உணவு பஞ்சமும் மற்றும்  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

அதனை கருத்தில் கொண்டு இலங்கை பொருளாதாரத்தை நவீனப்படுத்த வேண்டும்.இனி வரும் காலங்களில் மேலும் வெளிநாட்டு கடன்களை சார்ந்து இருக்கக்கூடாது. கடன் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு காணவேண்டும். வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களை எதிர்த்தது தான் நமது இன்றைய சிக்கலுக்கு காரணம். திரிகோணமலையில் எண்ணெய் வயல் வளாகத்தை இந்தியாவுடன் சேர்ந்து மேம்படுத்த திட்டமிட்டோம்.

இந்நிலையில் இந்தியாவுக்கு இலங்கையை விற்பதுபோல் ஆகிவிடும் என்று எதிர்ப்புதெரிவித்திருந்தார். அதனால் அத்திட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டது.அதை அனுமதித்து இருந்தால், இன்று எரிபொருளுக்காக பல நாட்கள் வரிசையில் நிற்கும் அவலம் நேர்ந்திருக்காது. வரவிருக்கும் 25 ஆண்டுகளுக்கான தேசிய பொருளாதார கொள்கை கணக்கு போடப்பட்டு வருகிறது.

சர்வதேச நிதியத்துடன் அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்போம். நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க வேண்டும். அதற்கு அனைத்து கட்சி அரசு அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் என்னுடன் கைகோர்த்து உறுதுணையாக இருக்க  வேண்டும். நாட்டை சிறப்புடன் வழிநடத்த எல்லா கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்.

இந்த சிக்கலான நேரத்தில் இந்தியா அளித்த உதவியை குறிப்பிட விரும்புகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உரிய காலத்தில் பொருளாதார உதவி  இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்திருக்கிறது.எனவே இலங்கை அரசு மற்றும் அதிகாரிகளின் சார்பிலும் என் சார்பிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனினும் எரிபொருள் தட்டுப்பாடு இந்த ஆண்டு இறுதிவரை நீடிக்கும். இருப்பினும், தற்போது பிரச்சினை குறைந்துள்ளது. அனைவருக்கும் நியாயமான அளவுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் ஏற்படும் பொருளாதார பிரச்சனைகளை விரைவில் குறையக்கூடும் எனவும் கூறினார்.

author avatar
Parthipan K