மக்களே உஷார்! இந்த பகுதியில் வாலிபர் ஒருவருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்து விதமாக குரங்கம்மை என்ற நோய் தலைத் தூக்கி உள்ளது. கடந்த ஒரு மாதங்களாக குரங்கமை ஆங்காங்கே பரவி வரும் நிலையில் வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 30 வயது நபருக்கு முதன் முதலாக குரங்கமை நோய் பாதிப்பு அறிகுறி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவருடன் தொடர்பில்லிருந்தவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அதன் பிறகு மேலும் நான்கு பேருக்கு குரங்கு பாதிப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. மொத்தம் ஐந்து பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியானது. மேலும் குரங்கம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து கேரளா வருவோர் கண்காணிக்கப்பட்டனர் இதற்கு விமான நிலையங்களில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து கேரளாவிற்கு வருவோம் பொழுது மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரவர்களின் பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து கேரளாவின் நெடும் பாஷா சேரி விமான நிலையத்தில் வந்த வாலிபர் ஒருவருக்கு குரங்கம்மை நோய்கான அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த வாலிபரை உடனடியாக ஆளுமாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரத்த மாதிரிகளின் முடிவு வந்த பிறகு அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும் எனவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது குரங்கமை தொற்று சற்று வேகம் எடுத்து வருவதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவதுறையினர் அறிவுறுத்தி வருகின்றார்கள்.