இந்த  மாவட்ட மீனவர்கள் மட்டும் கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை?மீன்வளத்துறை அதிகாரி அதிரடி தகவல்!..

0
74
Only the fishermen of this district are not allowed to go to the sea? Fisheries department official action information!..
Only the fishermen of this district are not allowed to go to the sea? Fisheries department official action information!..

இந்த  மாவட்ட மீனவர்கள் மட்டும் கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை?மீன்வளத்துறை அதிகாரி அதிரடி தகவல்!..

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கன மழை ஆங்காங்கே கொட்டி வருகிறது. இந்நிலையில்  மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் கடல் கொந்தளிப்பால்   மீனவர்களுக்கு அதற்கான எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 22 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.இது கடந்த எட்டு ஆண்டுகளுக்கு இல்லாத இந்த மழையினால் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் குடிசைகளின்  வீட்டுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் ராமேஸ்வரம் கடற் பகுதிகள்,மன்னார் வளைகுடா மற்றும்  இலங்கையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை தெரிவித்தனர். மேலும் கடல் சீற்றத்தால் கடலின் அலைகள் வேகமாக அடித்து வருவதால் கப்பல்கள் மற்றும் படகுகளில் பயணம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும்.

எனவே மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம். இதனை மீன் வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு  வலிறுத்தி கூறினார்கள். எனவே மீனவர்கள் அனைவரும் இதனை கருத்தில் கொண்டு கடலுக்கு செல்வதை  முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.

author avatar
Parthipan K