தனியார் உணவு டெலிவரி ஊழியிருக்கும் மர்ம கும்பலுக்கும் இடையே நடந்தது என்ன? போலீசார் தீவிர விசாரணை!
கோவை மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சேர்ந்த கண்ணன். இவரது மகன் ஶ்ரீ விக்னேஷ் (18). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும் ஸ்ரீ விக்னேஷ் தனியார் உணவு டெலி நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஸ்ரீ விக்னேஷ் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் மேட்டுப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார் அப்போது ஏ ஆர் சி சந்திப்பு அருகே மற்றொரு இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தில் இருந்த மூன்று பேர்கள் ஸ்ரீ விக்னேஷ்யை வழிமறித்து தகராரில் ஈடுபட்டுள்ளனர்.
அதனையடுத்து அவரத்தின் வாகனத்தையும் பிடுங்கி வைத்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஸ்ரீ விக்னேஷ் கவுண்டம்பாளையம் புது பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு அந்த மர்ம கும்பல் மது அருந்திவிட்டு மீண்டும் ஸ்ரீ விக்னேஷ் மிரட்டி ரத்தினபுரி ரயில்வே தண்டவாளத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் சிலர் அவர்களுடன் சேர்ந்து அந்த மர்மகும்பல் ஸ்ரீ விக்னேஷ் தாறுமாறாக தாக்கியுள்ளனர். மேலும் இந்த தகராரில் படுகாயம் அடைந்த விக்னேஷ் ஸ்ரீ விக்னேஷ் சிவனிடம் இருந்து 24 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.1500 பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தை மர்மகும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும் இந்நிலையில் முகம், தலை, முதுகு பகுதிகளில் அதிக காயல் ஏற்பட்ட ஸ்ரீ விக்னேஷ்யை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் போலீசாரிடம் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் அந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தமர்ம கும்பலை தேடி அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆராய்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.