அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் திடீர் தற்கொலை!. தற்கொலைக்கான பின்னணி என்ன?
நான்காண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபர் திட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தது. பீகார்,உத்திரபிரதேசம்,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களை சேதப்படுத்தியதோடு ரயில்களுக்கும் தீ வைத்து எரித்தனர்.கடைகளடைத்தும் சாலையில் செல்லும் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் பல்லாரக்கணக்கான மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தெலுங்கானாவில் அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவரின் சடலம் ஒன்று கோதாவரி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அக்னிபத் போராட்டத்தில் இந்த மாணவனும் பங்கேற்றார் என்பது தெரியவந்தது.
எங்கே போராட்டத்தில் பங்கேற்றத்திற்காக என்னை கைது செய்து விடுவார்கள் என்று எண்ணி பயந்து இளைஞர் கோதாவரி ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார்.செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் இந்த மாணவர் கலந்து கொண்டான்.
எங்கே போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று மகன் பயப்பட்டதாகவும் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை என்றும் தனது மகன் கூறியதாக தந்தை கண்கலங்கி கூறினார்.மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவனை கண்டு சக மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.