பாஜக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு! கட்சி பிரமுகர் கண்டனம்!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பகுதிகளில் தமிழகத்தின் கனிம வளம் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தட்டிக்கேட்ட குமரகுரு, செந்தில், சபரி ஆகிய பா. ஜ. க. வினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் அந்த வளக்கானது பொய்யென பலரால் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் கருங்கற்கள் கொண்டு செல்லப்பட்டால் லாரியை தடுத்து நிறுத்திய பாஜக நிர்வாகிகளிடம் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறி சமாதானப்படுத்தி அனைவரையும் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். மேலும் இது கடும் கண்டனத்துக்குரியது எனவும் கூறப்படுகிறது.
அதனை தட்டிக் கேட்பவர்களை கைது செய்வதும் தமிழகத்தின் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் கனிமவள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்முத்தூரிலிருந்து திருச்சூருக்கு கருங்கற்கள் கொண்டு சென்ற இரண்டு லாரிகளை தடுத்து நிறுத்தியதால்தான் அவர்களின் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.