வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!..
ராஜஸ்தான் அரசின் முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பே இத்திட்டத்தின் செயல்படுத்த மாநில காங்கிரஸ் அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது.அதன்படி ரூ12,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஏலம் புதன் கிழமையிலிருந்து நடந்து வருகின்றது.அங்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம் அம்சத்தை கொண்டிருக்கும்.ஒரு சிம் ஏற்கனவே அதன் பிரைமரி ஸ்லாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும்.இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு இணைய இணைப்பும் அளிக்கப்படுகிறது.இதனை மற்ற முடியாது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இணைய இணைப்பு அளிப்பதற்கு மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அவற்றில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பண்டிகை காலம் தொடங்குவதற்குள் முதல்கட்ட ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான பணிகளை ராஜஸ்தான் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது.