சைக்கிள் திருடர்கள் கைது! கல்லூரி மாணவர்கள் உல்லாசம்!
சென்னை விருகம் பாக்கம் சிவசங்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 48). சினிமா துறையில் கேமராக்களுக்கு லென்ஸ் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த சைக்கிள் வீட்டின் அருகே சில தினங்களுக்கு முன் நிறுத்தி வைத்திருந்தார்.அந்த சைக்கிள் திருடு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த பத்து நாட்களில் விருகம்பக்காம் காவல் நிலையத்தில் சைக்கிள் திருடு போனதாக நான்கு புகார்கள் குவிந்தன.
இதையெடுத்து விருகம்பாக்கம் போலீஸார் சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அனைத்து இடங்களிலும் திருடியது ஒரே நபர்தான் இன்பது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விருகம்பாக்கத்தைச் மதன் குமார்(19) மற்றும் அவரது நண்பர் தேனி காந்த் ஆகிய இருவரும் என தெரிய வந்தது. இதையடுத்து விருகம்பாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கூட்டி வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கல்லூரி மாணவர்களான அவர்கள் தங்களின் செலவிற்காக விருகம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடிச் சென்று அதை குறைந்த விலைக்கு விற்று ஜாலியாக இருந்து வந்ததும் தெரிய வந்தது. விருகம்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட உயர் ரக சைக்கிள்களை இவர்கள் இருவரும் இணைந்து திருடியதும், அவற்றுள் சைக்கிளிங் செல்வதற்காக தங்களுக்கு என இரண்டு விலை உயர்ந்த சைக்கிள்களை வைத்துக் கொண்டு மற்ற சைக்கிள்களை விற்று உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு கல்லூரி மாணவர்களிடமிருந்து 5 விலை உயர்ந்த சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.