பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த அவல நிலை! மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை !

0
223
The plight of school students! Request to the corporation management!
The plight of school students! Request to the corporation management!

பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த அவல நிலை! மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை !

கோவை மாவட்டம்  குனியமுத்தூர் பகுதியில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த பள்ளியில் இரண்டு மைதானங்கள் இருக்கிறது.

இந்த இரண்டு மைதானங்களிலும் நேற்று பெய்த கனமழை காரணமாக நீர் தேங்கி குளம் போன்றுள்ளது  இதனால் இன்று பள்ளி துவங்க பட்ட நிலையில் பள்ளி மைதானம் குளம் பொன்று காட்சியளிக்கும் நிலை உள்ளதால் இன்று மாணவர்கள் கடும் பாதிப்பு க்கு உள்ளாகும் நிலை உள்ளது.

மேலும் இது குறித்து பள்ளியின் பெற்றொர் ஆசிரியர் கழக பொருப்பாளர் முகமது அலி பேசினார். அப்போது அவர் பள்ளியில் உள்ள இரு மைதானத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது இது மாணவ மாணவிகளை கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது. இது வரை மாவட்ட நிர்வாகமோ மாநகராட்சி நிர்வாகமோ பள்ளி கல்விதுறையோ இந்த நீரை அப்புறப்படுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பள்ளி மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகுவதற்க்கு முன்னர் மணல் கொட்டியோ அல்லது மின் மோட்டார் மூலமாகவே இந்த தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமக்களை காவு வாங்கி வரும் மழை!!.நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!மீட்பு பணி தீவிரம்..
Next articleகண்கலங்கி நிற்கும் விவசாயிகள்!..தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் ..அரசின் முடிவு என்ன?