கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!..வியப்பில் பெற்றோர்கள்..
மாணவிகளின் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதை கட்டுபடுத்த அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் குறித்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல் துறையினர் தொடங்கி வைத்தார்.
அதன்படி கோவை மாவட்டம் கோவில்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த முப்பதிற்கும் மேற்பட்ட மாணவிகளை ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் நிகழ்ச்சியின் வாயிலாக போலீசார் அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சிற்காக ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள்,கலவர தடுப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் என பல வகைகளை கொண்ட பொருட்களை குறித்து மாணவிகளுக்கு போலீசார்கள் அவற்றின் பெயர்களை என்னவென்று விளக்கினர்.
இதனை தொடர்ந்து மாணவிகளை அனைவரையும் வரிசையாக ஒன்று திரட்டி துப்பாக்கி சுடும் மையத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கு அனைத்து மாணவிகளுக்கும் துப்பாக்கி கொடுக்கப்பட்டது.பின் அவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த பயிற்சியில் போது போலீசார்கள் சிலர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
பிறகு அங்கு சென்று வந்த மாணவிகள் சிலர் இந்த பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாவும் மேலும் சில மாணவிகள் இதற்காகவே நான் காவல் துறையில் சேர விரும்புகிறேன் என மகிழ்ச்சியில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.இதனை கண்ட சிறுமியின் பெற்றோர்கள் பெருமிதம் அடைந்து வருகின்றனர்.