120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்! மூன்று பேரை மீட்கும்  பணி தீவிரம்!

120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்! மூன்று பேரை மீட்கும்  பணி தீவிரம்!

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன்(18). இவர் அவருடைய நண்பர்களுடன் நேற்று சிறுவாணி பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம்  பண்டிகையை கொண்டாடியுள்ளார். இவர்கள் நேற்று இரவு அங்கேயே தங்கி விட்டு காலையில் அவர்களின் ஊரிற்கு காரில் திரும்பியுள்ளனர்.

அந்த காரை ரோஷன் இயக்கியுள்ளார். அப்போது அந்த காரானது போளுவாம்பட்டி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தென்னமநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த பொது கார் கட்டுப்பாட்டை இழந்தது.

அந்த காரானது சாலையின் அருகில் உள்ள 120 அடி கொண்ட கிணற்றில் பாய்ந்தது. இந்நிலையில் காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் காரின் கதவை திறந்து வெளியே குதித்து விட்டார்.மேலும் அவருடன் வந்த கல்லூரி நண்பர்களான ஆதர்ஷ்(18),ரவி (18)மற்றும் நந்தனன்  (18) ஆகியோர் காருடன் சேர்ந்து நீரில் மூழ்கியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்க்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில்  தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நீரில் மூழ்கியுள்ள மூன்று பேரை கிரைன் மூலம் மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment