மனைவியை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைக்க கூடாது!! கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்!!

0
213
Supreme Court, tantamount to rape, new order
Supreme Court, tantamount to rape, new order

மனைவியை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைக்க கூடாது!! கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்!!

இந்திய கருக்கலைப்பு சட்டத்தின் படி திருமணம் ஆன பெண் இருபது வாரங்களுக்குள் அவரின் சம்மதத்துடன் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். அதுவே பலாத்காரம்,கணவனால் கைவிடப்பட்ட பெண் மற்றும் இதர மருத்துவ காரணங்களால் கருவுற்றிருந்தால் அவர்களுக்கு 24 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய அனுமதி உள்ளது. அந்த வகையில் மணிபூரை சேர்ந்த இளம் பெண் திருமணம் செய்து கொள்ளாமல் அவருடைய ஆண் நண்பருடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் கருவுற்ற நிலையில்,தனது 20 வார வயிற்றில் வளரும் கருவை கலைக்க உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்தார். ஆனால் அவரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் அப்பெண் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இவர் கொடுத்த மனுவில் கணவர் என்று குறிப்பிடவில்லை. அதனால் இது இரண்டாவது கருக்கலைப்பு சட்டத்தின் அடிப்படையில் வரும். அதனால் இப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வாறு திருமணம் ஆனவர் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் என்று இரு வேறு கருக்கலைப்பு சட்டம் உள்ளதால் அதனை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.

இந்த ஆய்வின் முடிவில், அனைத்து பெண்களுக்கும் சட்ட ரீதியான கரு கலைப்பிற்கு உரிமை உடையவர்கள் என தெரிவித்தனர். அதேபோல திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் என்ற வகையில் கருக்கலைப்பு சட்டம் இருப்பது சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறினர்.மனைவியை பலவந்தப்படுத்தி உடலுறவு கொள்வதும் பலாத்காரம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கருவை சுமப்பதும் அதனை கலைப்பதற்கான உரிமையும் பெண்ணிற்கே உண்டானது தெரிவித்துள்ளனர்.

Previous articleஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை! உடனே நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் 
Next articleமக்களே அலர்ட்! இந்த  பகுதியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!