ஜாதி சான்றுகளுக்காக உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வாலிபர்:! பரபரப்பு சம்பவம்!
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகலில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் (49) என்பவர்,உயர் நீதிமன்றத்தின் வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவாயிலின் வழியாக உள்ளே சென்று தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் உடலில் வேகமாக தீப்பரவியது.பெட்ரோல் தலையில் ஊற்றிய நிலையில் ஐகோர்ட்டின் உள்ளே வேகமாக அந்த வாலிபர் நடந்து சென்றார்.உடல் முழுவதும் தீ பரவியதன் காரணத்தால்,காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களால் அவரின் பக்கத்தில் நெருங்க முடியவில்லை.
இலவச சட்ட ஆலோசனை மையம் அருகில் அன்நபர் வந்தவுடன் தீயணைக்கும் எந்திரம் மூலம் தீயை அதிகாரிகள் அனைத்தனர்.இதனால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்களும் விசாரணைக்கு வந்த பொதுமக்களும் அங்கு கூட்டமாக திரண்டனர்.
இந்த பதட்டமான சூழ்நிலையிலும் வலியிலும்,தீக்குளித்த வேல்முருகன் அங்கு கூடி நின்றவர்களின் மத்தியில் சத்தமாக பேசினார். நான் மழைக்குறவ இனத்தைச் சேர்ந்தவன் எனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்க அரசு அலுவலகங்களில் நீண்ட நாட்களாக அலைந்து பார்த்தேன்.ஆனால் என் மகனுக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை அந்த வருத்தத்திலேயே நான் இந்த முடிவை எடுத்தேன் இனி என்னை போன்ற சாமானிய மக்களுக்கு சாதி சான்றிதழ் உடனடியாக கிடைத்து விடும் என நம்புகிறேன் என்று உருக்கமாக அவர் கூறினார்.
இதற்கிடையே உடல் முழுவதும் தீ காயங்களுடன் ஆம்புலன்சில் ஏற்றி செல்லப்பட்ட வேல்முருகன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் சைதாப்பேட்டை பெண் மாஜிஸ்திரேட்டு அனிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று வேல்முருகனிடம் வாக்குமூலம் பெற்றார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.