முறைகேடாக 116 பேருக்கு பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்:! 5 பேர் பணியிடை நீக்கம்!

0
85

முறைகேடாக 116 பேருக்கு பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்:! 5 பேர் பணியிடை நீக்கம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் 116 பேர் முறைகேடாக பட்டம் பெற முயன்ற விவகாரத்தில் உதவி பதிவாளர் உள்ளிட்ட ஐந்து பேரை சென்னை பல்கலைக்கழகம் பணியிடம் நீக்கம் செய்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் 2020 ஆம் ஆண்டு ஊரடங்கின் காரணமாக தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெற்றன. 1980-81 கல்வியாண்டு முதல் விட்டுப்போன தேர்வினை மீண்டும் எழுதலாம் என பல்கலைக்கழகங்கள் வாய்ப்பினை அளித்திருந்தது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தொலைதூர கல்வி இயக்கத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்காத பலரும் தேர்வில் தேர்ச்சி அடைந்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் இதனை விசாரிக்க பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் சார்பில், சட்டப்படிப்புகள் துறை இயக்குனர் சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த விசாரணையில்,பல்கலைக்கழகத்தின் உதவி பதிவாளர் தமிழ்வாணன்,அலுவலக உதவியாளர் ஜான் வெஸ்லின், ஊழியர்கள் எழிலரசி மற்றும் மோகன்குமார், தேர்வு பிரிவு ஊழியர் சாந்தகுமார் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த ஐந்து நபர்களையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.மேலும் பணியிடை நீக்கம் குறித்து ஊழியர்கள் தரப்பில் இரண்டு வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்,இவர்கள் அளிக்கும் விளக்கத்தை தொடர்ந்து இவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு முடிவெடுக்கப்படுமென்றும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.

author avatar
Pavithra