நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

0
136
Writ petition filed against NEET exam! Postponed for three months!
Writ petition filed against NEET exam! Postponed for three months!

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

நீட் தேர்வு கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது அந்த மனுவில் சில திருத்தங்கள மேற்கொள்ளப்பட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.மேலும் அந்த மனுவில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால் கிராமப்புற மாணவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த புள்ளி விவரங்களை தமிழக அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரிட் மனு உச்ச நீதிமன்ற நிதிபதிகள் சுதான்சு தூலியா அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணை நடத்தி அப்போது அந்த மனுவில் தமிழக அரசின் வலியுறுத்தல்களை கருத்தில் கொண்டு ரிட் மனுவை குறித்து விசாரணை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.அந்த உத்தரவின் பேரில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க கோரி தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விளக்கு கோருவதற்காக மருத்துவப் படிப்புகளுக்கான தமிழ்நாடு மாணவர் சேர்க்கை 2021என்ற மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த மசோதா பரிசீலனையில் உள்ளதால் இந்த வழக்கை  12வாரம் ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.