சேலம் தினம் இன்று! அவற்றின் சுவாரசியாமான தகவல்கள் இதோ!
சைலம் என்றால் மலைகளால் சூழ்ந்த வாழ்விடம் என்பது தான் பொருள்.சைலம் என்று அழைக்கப்பட்ட இடமே நாளடைவில் சேலம் என மாறியது.மேலும் சேலம் மாவட்டம் இன்று 156 ஆண்டுகள் கடந்து 157ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.சேலம் என்பது தமிழகத்திலேயே சென்னை ,கோவை ,மதுரை ,திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மேலும் சைலம் என்ற பெயரில் இருந்து சேலம் என மாறியதற்கு எந்த ஒரு ஆதாரங்களும் கல்வெட்டுகளும் இல்லை.அதையடுத்து சேலம் என்றாலே நினைவிற்கு வருவது மாம்பழம் தான்.சேலத்திற்கு மாங்கனி நகரம் என்ற பெயரும் உண்டு.சேலத்தில் இரும்பு உருக்கு ஆளை அமைந்துள்ளது அதனால் இதற்கு ஸ்டீல் சிட்டி என்ற பெயரும் உண்டு.
சேலம் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்களில் மிகவும் பழமையான இடங்களும் உண்டு அதில் குறிப்பாக உலகின் மிக உயரமான முருகன் சிலை ,கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ,தாரமங்கலம் சிவன் கோவில் ,திப்பு சுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட் ,பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் ,எருமாபாளையம் ராமானுஜர் மடம் போன்றவைகள் சிறப்புவாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.
சுற்றுலா தலங்களில் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு ,டெல்டா விவாசியிகளின் தாயாக விளங்கும் மேட்டூர் அணை போன்றவைகள் அமைந்துள்ளது.மேலும் சேலத்தில் பெருமையாக கூறும் வகையில் மலைகள் ,ஆறுகள் ,பூங்கா போன்றவைகள் உள்ளது.