ஏ.டி.எம்லிருந்து பணம் வராமல் அக்கவுண்டில் டெபிட்டான சர்ச்சை – நூதன முறையில் நடந்த கொள்ளை 

0
70
No money from ATM! Dispute over debit in account - theft by modern method
No money from ATM! Dispute over debit in account - theft by modern method

ஏ.டி.எம்லிருந்து பணம் வராமல் அக்கவுண்டில் டெபிட்டான சர்ச்சை – நூதன முறையில் நடந்த கொள்ளை

சென்னை அண்ணாசாலை கேசினோ திரையரங்கம் முன்பு உள்ள தமிழ்நாடு மெர்கண்டை வங்கி ஏ.டி.எம்-ல் கடந்த ஜூலை மாதம் வடிக்கையாளர்கள்  பணம் எடுக்கும்போது பணம் வராமலே டெபிட் ஆகியுள்ளது.

இதனால் அச்சம் அடைந்த வடிக்கையாளர்கள் வங்கி கிளையில் சென்று புகார் அளித்தனர்.  வங்கி அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் நூதன முறையில் ரூ.28,500 பணம் கொள்ளை அடித்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில்  வங்கி அதிகாரிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனடிப்படையில்  விசாரணை மேற்கொண்ட சிந்தாரிப்பேட்டை போலிசார் விசாரணை மூலம் மர்ம நபர் ஏ.டி.எம்-ல்  பணம் வரும் பகுதியில் உள்பக்கமாக  இரு பக்கம் ஒட்டும் செல்லோ டேப்பை  ஒட்டி ஏ.டி.எம்-ல் வாசலில் நிற்பதும் பின் வடிக்கையாளர் சென்று ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க செல்லும்பொது  பணம் வந்து செல்லோடோப்பில் உள்பக்கமாக ஒட்டிகொண்டு வெளியே வராமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஒட்டிக்கொண்டு இருக்கும் பணத்தை மர்ம நபர் பின் எடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதே பாணியில் 15 முறை கொள்ளை அடித்திருப்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின்அடிப்படையில்  சிந்தாரிப்பேட்டை போலீசார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

author avatar
CineDesk