பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

0
190
University exams cancelled! Date to be announced later!
University exams cancelled! Date to be announced later!

பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

வங்கக கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவில் இருந்தே தமிழகத்தில் மழை பொழிய தொடங்கியது அதனால் தமிழகத்தில் நேற்று இரவே 10 மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மேலும் 14 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்த வகையில் கடலூர் ,அரியலூர் ,விழுப்புரம் ,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதனால் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று தேர்வுகள் நடைபெற இருந்தது.

ஆனால் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன் அறிவித்துள்ளார்.

Previous articleகனமழையை சமாளிக்க ஏரி குளங்களில் நீர் இருப்பை குறைக்க நடவடிக்கை! சென்னை மாநகராட்சி அதிரடி!
Next articleஅடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் இங்கெல்லாம் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!