நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம்! தடை விதித்து உச்சநீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

0
187
The matter of giving mercy marks in NEET exam! The order issued by the Supreme Court banning!
The matter of giving mercy marks in NEET exam! The order issued by the Supreme Court banning!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம்! தடை விதித்து உச்சநீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

இளநிலை மருத்துவ படிப்பிற்கு தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகின்றது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடத்தபடமால் இருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வு நடைபெற்றது.

அந்த தேர்வை திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் எழுதினார்.அப்போது அந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றில் மற்றும் தவறான பதில் கொடுக்கபட்டிருந்தது.அதனால் அவர் அந்த கேள்வியை எழுதாமல் வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தேசிய தேர்வு முகமைக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.அந்த மனுவில் நான் விடயளிக்காமல் வந்த அந்த ஒரு கேள்விக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கவேண்டும் என கோரி இருந்தார் ஆனால் அங்கிருந்து அவருக்கு உரிய பதில் ஒன்றும் கிடைக்கவில்லை.அதனால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கானது கடந்த அக்டோபர் மாதம் தலைமை நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்த அந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கருணை மதிப்பெண்களாக நான்கு மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டனர்.

இந்த நான்கு மதிப்பெண்கள் வழங்குவதை அரசின் நிறுவனமான தேசிய தேர்வு முகமை மறுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இதனை தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

அந்த மனு நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்  சந்திரசூட் நீதிபதி ஹிமா, கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ,மனுதாரர் சம்பந்தப்பட்ட கேள்வியை முயற்சிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.ஆனால் இது போல் ஒருமுறை அனுமதித்தால் தொடர்ந்து இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும் என கூறினார்.

அப்போது நீதிபதிகள் பத்து கேள்விகளுக்கு எதிராக பி பிரிவிலிருந்து மனுதாரர் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் முயற்சி செய்துள்ளார்.ஆனால் அவர் கேள்வி எண் 97 ஐ முயற்சி கூட செய்யவில்லை. அதனால் உயர்நீதிமன்றம் மூலம் வழங்கபட்ட நான்கு கருணை மதிப்பெண் பலனை பெற அவர் ஏற்றவர் இல்லை என தெரியவந்துள்ளது என கூறினார்.

இந்த வழக்கிற்கு எதிர் மனுதாரர்க்கு நோட்டீஸ் வழங்கவேண்டும்.அவர் அதற்கான பதில் மனுவை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகின்றது என நீதிபதி தெரிவித்தார்.

Previous articleஉலக பாரம்பரிய வாரம் – இன்று ஒருநாள் மட்டும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி பார்வையிட அனுமதி 
Next articleவிரைவாக காலை உணவு செய்ய வேண்டுமா? உங்களுக்காக அசத்தலான ரெசிபி இதோ..!