சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!
நமது முன்னோர் காலத்தில் நூறில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்தது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை போன்ற நோய்கள் தான். ஆனால் தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை.
மருத்துவரிடம் அதிகப்படியான நோயாளிகள் செல்பவர்களில் சர்க்கரை வியாதி உடையவர்களே அதிகம் என புள்ளி விவரம் குறிப்பிடுகின்றது. இந்த சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுபடும் உதவுகின்றது.
நமது எடையை கட்டுப்பாட்டில் வைக்க புடலங்காய் உதவுகிறது.நீருடன் புடலை இலைச் சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை, தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை வராது. காய்ச்சலையும் கட்டுப்படுத்தும்.
இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து தினமும் 2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர இதயம் சம்பந்தபட்ட நோய்கள் சரியாகும்.புடலை இலையானது குடல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுகிறது.
ஆலோபேஷபியா எனப்படுகிற புழுவெட்டால் பாதிக்கப்பட்டு, முடியை இழப்போருக்கு புடலங்காய் இழந்த முடியை மீட்டுத் தரும்.மேலும் புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.
புடலங்காயில் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவு இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை கொண்டது.அதுமட்டுமின்றி பொடுகைப் போக்கும் குணமும் புடலங்காயிற்கு உண்டு.