சூப்பர் ஸ்டார் தற்போது சிறையில் தான் இருக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!
கேரளா மாநிலத்தில் வசித்து வருபவர் மோகன்லால்.இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள்.
அப்போது அவருடைய வீட்டில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் இருந்தாக அதனை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த்தனர்.
இந்நிலையில் கேரள அரசு அந்த வழக்கை திரும்பப் பெறுவதாக பெரும்பாவூர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்தது.ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெரும்பாவூர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
அதனை தொடர்ந்து நடிகர் மோகன்லால் பெரும்பாவூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவை விசாரித்த கேரள அரசு யானை தந்தம் மோகன்லால் சட்டத்தை மீறவில்லை என்றும் அவை வளர்ப்பு யானை இறந்ததால் எடுத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் கேரள அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கேரள உயர்நீதிமன்றம் ஒரு சாமானியனாக இருந்தால் அரசு இவ்வாறான தளர்வு அளிக்குமா என்று கேள்வி எழுப்பினார்கள்.சட்டம் என்பது அனைவருக்கும் சமமான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.கேரள சூப்பர் ஸ்டரான இவர் சாதாரண மனிதராக இருந்திருந்தால் தற்போது சிறையில் இருந்திருப்பார் என்றும் கருத்து தெரிவித்தனர்.