கனமழை எதிரொலி! இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!
தென்கிழக்கு வங்கக்கடலில் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகம் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்து வந்தது.அதனால் நேற்று தமிழகத்தில் உள்ள ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.மழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி ,குன்னூர் ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை ,தொண்டாமுத்தூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.அதனால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அதனால் கோவை குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளனர்.