ஆண் நண்பருடன் பொது இடத்தில் மாணவி செய்த காரியம்! முகம் சுழித்த பொதுமக்கள்!
கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் கிராமத்துக்கு மேற்கே வைதேகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.அங்கு வனவிலங்கு நடமாட்டம் அதிகளவில் இருப்பதினால் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.அதனால் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதினால் கோவையை சேர்ந்த 20 வயது மதிக்க தக்க பெண் அவருடைய ஆண் நண்பருடன் அங்கு சென்றுள்ளார்.அப்போது அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அந்த பெண்ணை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தலில் அந்த பெண் அந்நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் அந்த பெண் கல்லூரி மாணவி என்பதும் அவருடன் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஆண் நண்பருடன் தான் அங்கு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து தான் மது அருந்தினார்கள் என்பதும் தெரியவந்தது.மேலும் மது அருந்திய காரணத்தினால் தான் அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.அதனையடுத்து அந்த மாணவி மற்றும் மாணவனை போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.