தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் இன்று முன் பதிவு செய்யலாம்!
கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்து மீண்டும் அனைத்து சேவைகளும் தொடங்கப்பட்டது.அதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.மேலும் தற்போது ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருப்பதினால் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யபட்டது.
இந்நிலையில் செகந்திராபாத் முதல் ராமநாதபுரம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது,மேலும் இது குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதிலிருந்து வராம் தோறும் புதன்கிழமை அன்று சிறப்பு ரயில் வண்டி எண் 07695 இயக்கப்படவுள்ளது.
செகந்திராபாத்திலிருந்து ஜனவரி 4,11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும் என தெரிவித்துள்ளனர்.மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை தோறும் ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் வண்டி எண் 07696 ஜனவரி 6,13,20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் காலை 9.50 மணிக்கு பபுறப்படும் ரயில் மறுநாள் பகல் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த ரயில் சென்னை,எழும்பூர், செங்கல்பட்டு,திருவாரூர், திருத்துறைப்பூண்டி,அதிரம்பட்டினம்,புதுக்கோட்டை,அரந்தாங்கி,காரைக்குடி,மானாமதுரை, சிவகங்கை வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ரயிலிற்கு இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.