1 நிமிடத்தில் பற்களில் உள்ள கரை மறைய இதனை செய்தால் போதும்!!
தினம்தோறும் இருவேளை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறிவரும் பட்சத்தில் அதனை யாரும் சரியாக பின்பற்றுவதில்லை. குறைந்தபட்சம் சாப்பிட்ட பிறகு ஆவது வாயை நன்றாக கொப்பளித்து விட்டு தூங்குவது நல்லது.
ஆனால் இதனை யாரும் செய்யாததால் பெரும் பாலானோருக்கு சொத்தை பல் மேலும் சாப்பிட்ட உணவுகள் பற்களில் ஒட்டிக்கொண்டு அதுவே கரையாக மாறுவது என உண்டாகிறது.
இதனை எல்லாம் தவிர்க்க நமது வீட்டில் இருக்கும் மூன்று பொருள் போதும். அதனை வைத்து நமது பல்லில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
துளசி இலை பொடி 1டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை பழம்
தேங்காய் எண்ணெய்
செய்முறை:
துளசி இலை பொடியை ஒரு குட்டி பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இறுதியில் தேங்காய் எண்ணெய் இரண்டு அல்லது மூன்று சொட்டு விட வேண்டும்.
எலுமிச்சை பழத்தை நேரடியாக பற்களில் உபயோகிக்க கூடாது என்பதால் சிறிதளவு தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம். மூன்றையும் நன்றாக பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
இதனை வாரத்தில் ஒரு முறை காலையில் எழுந்ததும் இந்த பேஸ்ட்டை வைத்து பல் துலக்க வேண்டும். இவ்வாறு செய்து வர சொத்தை பல் வலி பற்களில் உள்ள கரை என அனைத்தும் நீங்கும்.