வாய் துர்நாற்றம் சரியாக இதோ சூப்பர் டிப்ஸ்! இதை கண்டிப்பா டிரை பண்ணி பாருங்கள்!
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஒரே நாளில் வாய் துர்நாற்றம் போக்கும் வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.
தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் பலதரப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். உணவு எடுத்துக் கொண்டதன் பிறகு வாய் மட்டும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள இரவு உறங்குவதற்கு முன் மற்றும் காலை சாப்பிடுவதற்கு முன் நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் அவ்வாறு செய்யாமல் விடுவதன் காரணமாக நம் உடலுக்கு பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
ஒரே நாளில் வாய் துர்நாற்றம் ஈறுகள் பற்களில் உள்ள பிரச்சனைகள் ஆகியவற்றை குணப்படுத்தும் முறைகள் எவ்வித செலவுமின்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம். அதனை பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.
வாய் துர்நாற்றத்தை போக்கக்கூடிய அருமருந்தில் ஒன்று கிராம்பு ஆகும். இதில் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. நம் வாய் பகுதிக்கு மற்றும் நம் உடல் பகுதிக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கக்கூடியது. உணவு உண்ட பிறகு இரண்டு கிராம்பினை வாயில் போட்டு மெல்வதன் காரணமாக வாயில் உள்ள துர்நாற்றங்கள் நீங்கி புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். செரிமானத்தை விரைவாக உதவும்.
ஏலக்காய் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை நீக்கி புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வாசனையாகவும் வைத்துக் கொள்ளும். எலுமிச்சை இதில் உள்ள சிட்ரிக் ஆசிட் வாய்ப்பகுதியில் உள்ள பாக்டீரியா மற்றும் ஈறு பிரச்சனைகள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும். பாக்டீரியாக்களை அழிக்க இவை அருமருந்தாக உதவுகிறது. வயிற்றுக் கோளாறு வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் இதனை ஜூஸ் செய்து எடுத்துக் கொள்ளலாம்.
நான்கு கிராம்பு மற்றும் இரண்டு ஏலக்காய் ஆகிய இரண்டையும் நன்றாக பொடி செய்து 200 மிலி நீருடன் கலந்து மற்றும் அதனுடன் ஒரு எலுமிச்சை பழச்சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அதனை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டு.ம் பல் துலக்கியதற்கு பிறகு இரண்டு நிமிடம் வாய் பகுதியில் வைத்து கொப்பளித்து துப்ப வேண்டும்.
இவ்வாறு செய்து வருவதன் காரணமாக வாயில் உள்ள பாக்டீரியாவினால் ஏற்படும் துர்நாற்றம் வயிறு பிரச்சனை சொத்தை பல் ஆகியவை முற்றிலும் குணமாக இவை உதவுகிறது.