தூக்கம் உங்களுக்கு கனவாக இருக்கிறதா? படுத்தவுடன் ஆழ்ந்த நித்திரை வேண்டுமா? வழிமுறைகள் இதோ! 

0
402

தூக்கம் உங்களுக்கு கனவாக இருக்கிறதா? படுத்தவுடன் ஆழ்ந்த நித்திரை வேண்டுமா? வழிமுறைகள் இதோ! 

தூக்கம் நாம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் ஒரு ஓய்வு. அந்த ஓய்வு இல்லை எனில் நம்மால் வாழவே முடியாது. உடலைவிட மனதிற்கு அமைதி வேண்டியது அவசியம். அதற்கு முறையான தூக்கம் தேவை. அந்த தூக்கம் ஆழ்ந்த நிம்மதியான தூக்கமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய அடுத்த நாள் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் அமையும்.

நமது உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் அனைத்தும் இரவு நேரங்களில் தான் சுரக்கும். அதனால் 6 முதல் 8 மணி நேரம் வரை உறங்க வேண்டியது மிகவும் அவசியம். இப்போதைய காலகட்டத்தில் 30 வயதை கடந்த ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் ஆழ்ந்த உறக்கம் என்பது கிடைப்பதே இல்லை.

நிம்மதியான தூக்கம் நமக்கு கிடைக்காமல் போவதற்கு முதல் காரணம் உடல் உழைப்பின்மை. மன அழுத்தம், மனசோர்வு ஆகியன இருந்தால் தூக்கம் வராது. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் இவைகள் உங்களது தூக்கத்தை கெடுக்கும்.

சரி நமக்கு முறையான ஆழ்ந்த தூக்கம் கிடைக்க என்னதான் செய்வது?. நமக்கு சரியான தூக்கம் வர மெலட்டனின் சரியாக சுரக்க வேண்டும். மெலட்டனின் அதிகமாக சுரக்க இருளான சூழல் அவசியம். தூங்கும் இடம் வெளிச்சமாக இருந்தால் மெலட்டனின் சுரப்பு குறைந்து விடும். நிம்மதியான தூக்கம் உங்களை தழுவுவதற்கான எளிய வீட்டு வைத்திய முறைகளை பார்ப்போம்.

1. மெலட்டனின் சுரப்பை அதிகரிக்க மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையின் பேரில் ZZOWIN NEUTRA TABLETS என்ற மாத்திரையை மெலட்டனின் சுரப்பு அதிகரிக்க பயன்படுத்தலாம். இது பக்கவிளைவுகள் அற்றது. ஆனால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே சாப்பிட வேண்டும். இது உங்கள் உடலில் நீங்கள் இழந்த மெலட்டனின் சுரப்பை சரி செய்து மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருகிறது. இதன் மூலம் இயற்கையான முறையில் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

2. தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு வெதுவெதுப்பான சூடான பால் அருந்துவது நல்லது. இதில் உள்ள அமினோ அமிலம் மெலட்டனின், செரட்டனின் சுரப்புக்கு உதவுகிறது.

3. ஆழ்ந்த தூக்கம் வருவதற்கு எளிய முறையில் பொடி ஒன்றை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு 10 முந்திரி பருப்பு, 10 பாதாம் பருப்பு, ஆகியவைகளை ஈரம் போக நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து கால் கப் பூசணி விதைகளை வறுத்துக் கொள்ள வேண்டும். இவைகளை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

வெதுவெதுப்பான பால் முக்கால் டம்ளர் எடுத்துக் கொண்டு அதில் அரைத்து வைத்த பொடி ஒரு ஸ்பூன் மற்றும் சுவைக்கு ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை கலந்து தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு குடித்து வர நன்றாக ஆழ்ந்த தூக்கம் வரும்.

4. இரவு நேரங்களில் தூக்கம் வர பிஸ்தாவை வாங்கி சாப்பிட்டு வரலாம். இதில் உள்ள Tryptophan மெலட்டனின் சுரப்பை அதிகரிக்க செய்து தூக்கம் வர வழிவகுக்கும்.

5. படுக்கப் போவதற்கு முன்பு ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைப்பதோடு மலச்சிக்கல் பிரச்சனையையும் தடுக்கும்.

6. சில பேருக்கு மதிய நேரங்களில் சாப்பிட்ட உடன் தூங்கும் பழக்கம் இருக்கும். இது அவர்களின் இரவு நேர தூக்கத்தை பாதிக்கும்.

7. மேலும் தூங்காமல் இரவில் செல்போன், லேப்டாப், டிவி, ஆகியவற்றை பார்ப்பது இரவு நேர தூக்கத்தை கெடுப்பதோடு நமது கண் பார்வையையும் குறைக்கும். எனவே தூங்கப்போவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இவைகளை பார்ப்பது தவிர்த்தல் நல்லது.

8. சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் ஆழ்ந்த தூக்கம் சிரமமாக இருக்கும். அதிலும் சர்க்கரை உள்ளவர்களுக்கு இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றி தூக்கத்தை கெடுக்கும். மேலும் உடம்பில் ஏதேனும் ஒரு பகுதியில் வலி இருந்தாலும் அது உங்களது இரவு நேர தூக்கத்தை கெடுக்கும். ஆஸ்துமா, சளி பிரச்சனை இருந்தாலும் தூக்கத்தை பாதிக்கும்.

9. சில பேர் இரவு நேரங்களில் வயிறு முட்ட சாப்பிடுவது இரவு தூக்கத்தை தடுக்கும். மேலும் காரமான உணவுகளை எடுத்துக் கொள்வது செரிமான பிரச்சினைகளை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் இரவு தூக்கத்தையும் கெடுக்கும்.

10. காலை அல்லது மாலை ஏதேனும் ஒரு வேளையில் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. மேலும் இரவு உணவிற்கு பின்பு நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மாலை 5 மணிக்கு மேல் டீ காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை விடுத்து லேசான உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

Previous articleவிருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!
Next articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here