எப்பேர்ப்பட்ட சளி இருமல் இருந்தாலும் 5 நிமிடத்தில் குணமாகும் அற்புத ட்ரிங்!!
இந்த பருவநிலை மாற்றத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் சளி இருமல் காய்ச்சல் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தற்பொழுது அதிக பனிப்பொழிவு காரணத்தினால் சிறுவர்களுக்கு சளி ஏற்படுகிறது. அவ்வாறு சளி இருமல் காய்ச்சல் இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் இரண்டே நிமிடத்தில் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
இஞ்சி
தண்ணீர்
பிரியாணி இலை
செய்முறை
இஞ்சி ஒரு இன்ச் அல்லது இரண்டையும் அளவிற்கு நன்றாக தோல் சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் சீவியை இஞ்சியை துருவி கொள்ள வேண்டும். பின்பு பிரியாணி இலையை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அதில் துருவி வைத்துள்ள இஞ்சியை சேர்க்க வேண்டும். பின்பு கழுவி வைத்துள்ள பிரியாணி இலையை சேர்க்க வேண்டும். இதனை நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் சிறிதளவு பட்டையை எடுத்து நன்றாக இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஊற்றிய இரண்டு டம்ளர் தண்ணீர் ஆனது ஒரு டம்ளர் தண்ணீராக மாறும் வரை நன்றாக கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் கடைசியாக மூன்று கிராம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள மருத்துவ குணங்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்க அதிக தீயில் வைத்து சூடுபடுத்துவதுடன் குறைந்த தீயில் வைத்து சூடு படுத்துவது நல்லது. பின்பு அதனை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் தற்பொழுது வடிகட்டி எடுத்து வைத்துள்ள நீரில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் இந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இதுவே பெரியவர்கள் என்றால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீருக்கு வடிகட்டி உள்ள பானத்திலிருந்து நான்கு ஸ்பூன் என்ற வகையில் சேர்க்க வேண்டும். இதனை காலை நேரத்தில் குடித்து வர எப்பேடர்ப்பட்ட சளி இருமலும் குணமாகும்.