அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுக்கடுப்பு குணமாக? ஒரு கொத்து கருப்பு திராட்சை!

0
315

அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுக்கடுப்பு குணமாக? ஒரு கொத்து கருப்பு திராட்சை!

கருப்பு திராட்சைகளை தினமும் சாப்பிட்டு வருவதன் காரணமாக இதிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்வோம்.

தினசரி ஒரு கையளவு கருப்பு திராட்சைகளை என்பதன் காரணமாக வயதான காலங்களில் அல்சீமர் எனும் நோய் தாக்குவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

கருப்பு திராட்சையில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்பு செல்களின் திசுக்களை கட்டுப்படுத்துகிறது. கருப்பு திராட்சைகளை தினசரி உட்கொள்ளுவதன் காரணமாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய கொடிய நோயான மார்பக புற்றுநோய்கள் வராதவாறு பாதுகாத்துக் கொள்கிறது.

நம் உடலில் ஏற்படும் இதர வகையான புற்று நோய்கள் ஏற்படாதவாறு பாதுகாத்து கொள்கிறது. கருப்பு திராட்சை தினசரி சாப்பிட்டு வருவதன் காரணமாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் நெஞ்சு எரிச்சல், வயிற்று கடுப்பு, அஜீரண பிரச்சனைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

கருப்பு திராட்சில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் நம் உடலில் உள்ள யூரிக் அமிலங்களின் அளவை குறைத்து சிறுநீரகத்திற்கான வேலைகளை குறைக்க உதவுகிறது. இதன் விளைவாக சிறுநீரக பாதிப்புகள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்கிறது.

மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனையினால் அவதிப்பட கூடியவர்கள் மற்றும் ஒற்றைத் தலைவலியினால் அவதிப்பட கூடியவர்களுக்கு ஒரு அரு மருந்தாக கருப்பு திராட்சை செயல்படுகிறது.

தினசரி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓர் கையளவு கருப்பு திராட்சை சாப்பிட்டு வருவதன் காரணமாக நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கிறது.