ஒரு மாதத்திற்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் CCTV கேமரா பொருத்த வேண்டும்- உச்சநீதிமன்றம்

0
204
#image_title

ஒரு மாதத்திற்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் CCTV கேமரா பொருத்த வேண்டும்- உச்சநீதிமன்றம்

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் எனவும், இதனை ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் நிலையங்கள், புலனாய்வு அமைப்புகள், சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கடந்த 2020 டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் உள்ளிட்ட விசாரணை இடங்களில் ஒரு மாதத்துக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்  என மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை பின்பற்ற தவறும் பட்சத்தில், மத்திய உள்துறை செயலர், மாநில தலைமைச் செயலர்கள், மாநில உள்துறை செயலர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த வழக்கை ஏப்ரல்மாதம் 18 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.