ஒழுகமங்கலம் கிராமத்தில் கோவில் காளை இறப்பு நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஐந்து நிலை நாட்டார்கள் முல்லை மங்கள சேகரத்தை சார்ந்த ஒழுகமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் வழங்கி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வரதன் என்ற கோவில் காளை உடல் நலக்குறைவால் இறந்தது.
முன்னதாக கிராமத்து நாட்டார்கள் சார்பில் இறந்த வரதன் என்ற காளைக்கு கோவில் முன்பாக அனைவரும் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக டிராக்டர் மூலம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இறுதியாக கோவிலுக்கு அருகாமையில் உள்ள ஊரணி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடைபெற்ற இந்தநிகழ்வில் கோவில் நிர்வாகத்தினர், ஊர் முக்கியஸ்தர்கள், கிராமத்து இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இறந்த இந்த காளையின் சிறப்பாக ஏக்கர் பரப்பளவில் இப்பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெல்மணிகளை, இதர பயிர்களையோ சேதப்படுத்தியதில்லை என்பதாக இப்பகுதி கிராமமக்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.