தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2500 அபராதம்!!
சென்னை போக்குவரத்தின் காவல்துறை விதிகளை மதித்து நடப்பதற்கும் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவதற்கும் வாகன ஒட்டிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது அபராதமும் விதித்து வருகிறது.
காரில் கருப்பு ஸ்டிக்கர் அடர்த்தியாக ஒட்டப்படும், பம்பர் பொருத்தப்படும், நம்பர் ப்ளேட் சரியாக இல்லாமலும் இருப்பதாக கூறி ட்விட்டரில் ஒருவர் சென்னை போக்குவரத்துக்கு காவல்துறைக்கு புகார் அளித்திருந்தார்.
அதனை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்த சென்னை போக்குவரத்து காவல்துறை கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக 500 ரூபாய், நம்பர் ப்ளேட் முறையாக இல்லாததால் 1,500 ரூபாய், பம்பர் போட்டிருந்ததற்காக 500 ரூபாய் என மொத்தம் 2,500 ரூபாய் அபராதம் விதித்து அதற்கான சலானை தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்தது.
அதுவும் அந்த சலானை புகார் அளித்தவருக்கே ரீட்வீட்டில் பதிவிட்டனர் காவல்துறையினர். போக்குவரத்து காவல்துறை விசாரணையில் அந்த கார் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு சொந்தமானது என்றும், அவர் அரசு பதவியில் இருப்பதால் தமிழக அரசின் படத்தையும் தனது சொந்த காரில் பொருத்தி இருந்தது தெரியவந்துள்ளது.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்பட்டது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.