கொரிய மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிப்பு!!

0
203
#image_title
கொரிய மொழியில் ரீமேக் ஆகும் திரிஷ்யம்! கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிப்பு!
நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் கொரிய மொழியில் ரீமேக் ஆகவுள்ளதாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் கேன்ஸ் திரைப்படவிழாவில் கூறியுள்ளார்.
இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மாலையாள மொழியில் உருவான திரிஷ்யம் திரைப்படம் 2013ஆம் ஆண்டு வெளியானது. திரிஷ்யம் திரைப்படத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத், அனிசிபா ஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
மலையாளத்தில் கிடைத்த வரவேற்பை போல தமிழில் வெளியான திரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக்கிற்கும், ஹிந்தியில் வெளியான திரிஷ்யம் ரிமேக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்த திரைப்படம் கொரிய மொழியில் ரீமேக் ஆகவுள்ளது.
இதையடுத்து திரிஷ்யம் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் ஆந்தாலஜி ஸ்டுடியோஸ் இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து இந்த தகவலை பகிர்ந்துள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் திரிஷ்யம் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரிஷ்யம் திரைப்படம் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது என்று கூறினர்.
கொரிய மொழியில் ரீமேக் சொய்யப்படும் முதல் திரைப்படம் திரிஷ்யம் ஆகும். திரிஷ்யம் திரைப்படம் ஏற்கறவே தமிழ், ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.