பிரட் ஆம்லெட்டால் சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர்!! கமிஷ்னரின் அதிரடி நடவடிக்கை!!

0
285
Inspector suspended by Brett Omelette!! Action taken by the Commissioner!!
Inspector suspended by Brett Omelette!! Action taken by the Commissioner!!

பிரட் ஆம்லெட்டால் சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர்!! கமிஷ்னரின் அதிரடி நடவடிக்கை!!

லஞ்சம் வாங்குவது மிகப்பெரிய குற்றம் என்று அரசு ஊழியர்களுக்கு பலமுறை அறிவுரை கூறி வந்தாலும், அதனை சிலர் காது கொடுத்து கூட கேட்பதில்லை. ஏனென்றால் அரசு ஊழியர்களில் ஊர் சிலர் தற்பொழுது வரை மக்கள் கேட்கும் வேலையை முடித்து தர வேண்டும் என்றால் முதலில் லஞ்சம் தான் கேட்டு வருகின்றனர்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தான் நமக்கு சம்பளம் வழங்கப்படுகிறது, என்ற எண்ணம் இவ்வாறான ஊழியர்கள் மத்தியில் இருப்பதில்லை. அது மட்டுமின்றி லஞ்சம் கொடுக்க மறுக்கும் நபர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதும் அவர்கள் கேட்பதை செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வருவதையும் காலம் காலமாக வேலையாகவே வைத்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையில் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி என்பவர் ஓர் உணவகத்திற்கு சென்று பிரட் ஆம்லெட், ஜூஸ் என அவருக்கு விருப்பமானவற்றை சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டதற்கு அங்கிருந்த ஊழியர் பணம் தரும்படி கேட்டுள்ளார்.அதற்கு அந்த காவல் ஆய்வாளர் நாங்கள் யார் என்று தெரியுமா என மிரட்டியுள்ளார்.

அவரை மட்டும் மிரட்டாமல், கடை உரிமையாளரையும் ஆய்வாளர் விஜயலட்சுமி மிரட்டியுள்ளார். இவ்வாறு அவர் மிரட்டியது அந்த கடையில் உள்ள சிசிடிவி யில் பதிவாகியுள்ளது. கடை உரிமையாளரும் அந்த வீடியோவை கமிஷனரிடம் கொடுத்து புகார் அளித்துள்ளார். இதனை விசாரணை செய்த கமிஷனர் அமல்ராஜ், பெண் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் அவருடன் இருந்தவர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய அரசு ஊழியர்களே இவ்வாறு நடந்து கொண்டால் மற்றவர்கள் எப்படி காவல்துறையை மதிப்பார்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Previous articleதிரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!! 
Next articleபயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் இனிமேல் நெரிசலில் சிக்கி அவதிப்பட தேவையில்லை! வசதியாக பயணம் செய்ய போக்குவரத்து துறையின் புதிய சேவை விரிவாக்கம்!