பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் இனிமேல் நெரிசலில் சிக்கி அவதிப்பட தேவையில்லை! வசதியாக பயணம் செய்ய போக்குவரத்து துறையின் புதிய சேவை விரிவாக்கம்! 

0
189
#image_title

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் இனிமேல் நெரிசலில் சிக்கி அவதிப்பட  தேவையில்லை! வசதியாக பயணம் செய்ய போக்குவரத்து துறையின் புதிய சேவை விரிவாக்கம்! 

தமிழ்நாட்டில் உள்ள அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கம் பற்றி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு  செல்லும் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் பயணிகளின் முறையான பாதுகாப்பிற்கும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன்பாக இருக்கைகளை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த வசதி மூலம் மூலம் தினமும் சுமார் 60,000 பயணிகளில் 20,000 பயணிகள் வரை இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வசதியினை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவையானது மேலும் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

இதனால் தற்போது ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51,046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக்கைகள் வரையில் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கூடுதலாக பயணிகள் பயணிக்க வழி செய்யப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் இனிமேல் பயணிகள் இணையதளம் அல்லது கைப்பேசி வழியாக முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியும். அடுத்ததாக பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app ஆகியவை மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதியானது இன்று 07.06.2023 முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.