பெண்களுக்கு ஒரே நேரத்தில் டபுள் டமாக்க ஆப்பர்!! அடுத்த உதவித்தொகைக்கான சூப்பர் அறிவிப்பு!!
திமுக ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது தான் மகளிருக்கான ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதே போல நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டுத்தொடரில் சுய உதவி குழுக்களுக்கு ரூ 30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர். இவ்வாறு சுய உதவி குழுக்கள் மூலம் மகளிருக்கு கடன் வழங்குவதால் மற்ற தனியார் நிறுவனங்களை காட்டிலும் வட்டியின் விகிதம் குறைவாக இருக்கும்.
இது பெண்களுக்கு அதிக அளவில் உதவி புரியும். இந்த பட்ஜெட் கூட்டு தொடரில் மகளிருக்கான இந்த கடனுதவியானது பெருமளவில் வரவேற்கப்பட்டது. ரூ 1000 பணம் வழங்குவது நடைமுறை படுத்துவதை அடுத்து தற்பொழுது இந்த கடன் உதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது கடன் வழங்கும் வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் கனரா ஆகியவற்றுடன் இது குறித்து ஒப்பந்தம் செய்துள்ளது.இதனால் விரைவிலேயே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது துரிதமாக செயல்படுவது பெண்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்புக்கள் வெளிவந்ததையடுத்து தற்பொழுது மகளிர் சுய உதவி கடன் வழங்குவது பெண்களுக்கு டபுள் டமாக்க ஆப்பர் ஆக உள்ளது.