ரேஷன் கடையில் பெண்களுக்கென புதிய திட்டம்!! தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது புதிய திட்டங்களை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. குறைவான விலையில் அதிவேகமான இணையம் வழங்கும் திட்டத்தை விரைவில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது புதிய திட்டம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே மகாதானபுரம் நியாய விலை கடைகளில் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த செயல்முறையை கரூர் மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். மேலும், “தோழி” என்று சானிட்டரி நாப்கின்களுக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நாப்கின்கள் 21 ரேஷன் கடைகளில் விற்கப்படும். இதனால் பெண்கள் அனைவரும் அதிக தரத்திலான நாப்கின்களை பயன்படுத்த முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கரூர் மாவட்ட ஆட்சியர், மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் இந்த சானிட்டரி நாப்கின்கள் தயார் செய்யப்பட்டு இதற்கு தோழி என்று பெயர் சூட்டப்பட்டு நியாய விலைக்கடைகளில் விற்கப்பட்டு வருகிறது.
இந்த விற்பனை இன்று முதன் முதலாக கரூர் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. இது ஆறு நாப்கின்கள் அடங்கிய ஒரு பாக்கெட் ஆக 30 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இது சந்தையில் விற்கப்படுவதை விட 25 % விலை குறைவாக இருக்கிறது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் சுகாதாரமாக இருப்பதற்காக இது வழங்கப்படுகிறது.
முதலில் கரூர் மாவட்டத்தில் 21 நியாய விலை கடைகளில் இது விற்பனை செய்யப்பட உள்ளது. இதை உபயோகப்படுத்தும் பெண்களின் கருத்துக்களை கேட்ட பிறகு இதன் தரம் மேலும் உயர்த்தப்படும்.
ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல் மற்ற பெண்களும் இந்த நாப்கின்களை வாங்கி உபயோகிக்கலாம். கிராமப்புறப் பெண்களுக்கு பயன் பெரும் வகையில் பொது நியாய விலைக் கடைகளில் இந்த நாப்கின்கள் விற்கப்படும்.