உடலில் வேகமாக இரத்தம் ஊற இந்த ஆறு பழங்களை சாப்பிட்டு வாருங்கள்!!
இந்த காலத்தில் நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை தானாகவே உயரும்.
ஒருவருக்கு விட்டமின் சி குறைபாடு இருந்தாலோ அல்லது போலிக் அமில குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். எனவே ரத்த உற்பத்தியை அதிகரிக்க என்னென்ன பழங்களை சாப்பிடலாம் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
1. மாதுளம் பழம்:
மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை நாம் சரியாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் இதில் அயன், கால்சியம், புரோட்டின், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து என பல சத்துக்களும் மாதுளம் பழத்தில் நிறைந்துள்ளது. தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டு வர ரத்த சோகை நோய் ஏற்படாது.
2. அத்திப்பழம்:
அத்தி பழத்தில் கால்சியம் அளவு அதிகமாக உள்ளது. மேலும் இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் இது ரத்தப்போக்கை கட்டுப்படுத்தக்கூடியது. அத்தி பழங்களை இரவில் ஊற வைத்து காலை சாப்பிட்டு வரலாம் அல்லது தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். இதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
3. கொய்யாப்பழம்:
கொய்யா பழத்தில் இரும்புச்சத்து நார்ச்சத்து கால்சியம் பொட்டாசியம் ஆகியவை மிகுந்து காணப்படுகிறது. இதிலிருந்து சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இது மிகவும் பயன்படுகிறது.
4. உலர் திராட்சை:
திராட்சையில் கருப்பு திராட்சை பச்சை திராட்சை என்று இரண்டு வகை உள்ளது. கருப்பு திராட்சை நாம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் இதிலும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதன் காரணமாக உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
5. பேரீட்சை:
இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதிலிருந்து செத்து இருப்பதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கிறது.
6. தர்பூசணி:
100 கிராம் தர்ப்பூசணையில் 90% அளவு தண்ணீர் இருந்தாலும் மீதி அளவு இரும்பு சத்து உள்ளது. இதில் இரும்புச்சத்து மற்றும் விட்டமின் சி சேர்ந்து இருப்பதால் உடம்பில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மிகவும் பயன்படுகிறது.