இருக்கிற கொரோனா பீதியில் போலி கிருமி நாசினியா? அதிர்ச்சியில் மக்கள்!

0
144

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 130000க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் பரவாமல் தடுக்க முகத்தில் மாஸ்க் அணிய வேண்டும் அடிக்கடி சாணிடைஸர்கள் கொண்டு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்துவருகிறது.

இந்த நிலையில் ஹரியானா மாநிலம் குர்கானில் ஒரு தனியார் நிறுவனம் போலி சாணிடைஸர்களை தயாரித்தது தெரிய வந்துள்ளது. அதில் சாணிடைஸர்கள் நிறத்தில் உள்ள ஒரு திரவத்தை வழக்கமான பாட்டில்களில் அடைத்து வந்துள்ளனர்.

அதிரடியாக சோதனை செய்த சுகாதாரத்துறை அந்த நிறுவனத்தை சீல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தகவல் பொது மக்களை நீதிக்கு உள்ளாக்கியது என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleகுடியுரிமை சட்ட திருத்தம் குறித்து முஸ்லிம் அமைப்புகளுடன் மாநில அரசு சமரச பேச்சு : கலக்கத்தில் திமுக தலைவர்கள்!
Next articleஅமேரிக்க அதிபர் குடும்பத்துக்கு கொரோனா தொற்று : பரிசோதனை செய்து கொள்ள போகிறார் டிரம்ப்!